தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதிப் பொருட்களை கலந்து சிலர் கலப்பட ஜவ்வரிசியை தயாரித்து விற்பனை செய்வதால், ஜவ்வரிசி உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்வதும், இயற்கையாக ஜவ்வரிசி உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான சவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த நீதிபதி உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் வழங்கி, இந்த மாதிரிகளை ஆய்வு செய்து கலப்படம் உள்ளதா? என ஆய்வு செய்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.