அதிமுக மாவட்டச் செயலாளரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் 24-ஆம் தேதி சாத்தூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், ராஜேந்திரபாலாஜி தன்னை தாக்கியதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளரின் புகாரில், ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முன் ஜாமின் கோரிய மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டது.
முன்விரோதத்தில், பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவித்த ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், முன் ஜாமீன் வழங்குமாறு முறையிட்டார். இதனை அடுத்து, மனுவின் விபரங்களை பார்த்தபின்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி குறிப்பிட்டார்.