நெல்லையில் கல்குவாரி குட்டையில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாழையூத்து பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சக்தி, கார்த்திக் ஆகிய இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவர்களை தேடி பெற்றோர்கள் சென்ற போது, இருவரும் கல்குட்டை நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த போலீசார் சிறுவர்களின் உடலை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைவிடப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள கல்குவாரிகளுக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.