கொடைக்கானலில் வார விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் சுற்றுலா தலம் களைகட்டியது. வார இறுதி நாளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை, கோக்கர்ஸ் வாக், ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மேகக்கூட்டம், இதமான சீதோஷ்ண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
மேலும் படகு சவாரி, குதிரை சவாரி, சைக்கிள் சவாரி சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.