சேலம் மாவட்டம் பூலாவரியில் திமுக முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனான வீரபாண்டி ராஜா நேற்று மாரடைப்பால் காலமானார்.
அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் நேற்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் பூலாவரியில் இன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், வீரபாண்டி ஆறுமுகத்தின் சமாதியின் அருகேயே வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.