கோவில்களின் தங்கத்தை உருக்கும் நடைமுறை புதிதல்ல என்றும் கடவுளுக்கு வழங்கப்படும் தங்கத்தை கடவுளுக்கே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ஏழுகிணறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் ஏற்கனவே தங்கத்தை உருக்கும் நடைமுறை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜமீன்தாரர்கள் காலத்தில் கொடுத்த நகைகள் அப்படியே இருக்கும் என்றும் பழைய நகைகளை உருக்கும்போது ஒரு குண்டுமணி அளவு கூட முறைகேடு நடைபெறாது என்றும் சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கொரானா யாருக்கும் பரவவில்லை என்ற நிலைவரும்போது, வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.