அண்டை மாநிலங்கள் போல் அரசே கள் கொள்முதல் செய்வது என்பது அவசரப்பட்டு செய்யும் முடிவு அல்ல என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் 45 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கதர் வளாகத்தை ஆர்.காந்தி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பனைத் தொழிலாளர்களுக்கு பனை மேம்பாட்டுத்துறை மூலம் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.