சட்டவிரோதமாகச் சந்தனமரக் கட்டைகள் வைத்திருந்ததற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்கடாசலத்துக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் 13 இலட்சம் ரூபாய், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தனப் பொருட்கள், சந்தன மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரப் பொருட்கள் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து வனத்துறையினர் வெங்கடாசலம் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.