திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் நகை ஏலம் விடுவதில் முறைகேடு தொடர்பாகத் தலைவர், செயலாளர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இசக்கி முத்து என்பவர் அடகு வைத்த 25 கிராம் தங்க நகையைத் திருப்பாததால் ஏலத்துக்குச் சென்றது. சங்கத்தின் தலைவர் பூதப்பாண்டி, செயலாளர் சுந்தரி ஆகியோர் நகையை ஏலம் விடாமல் பதுக்கியதாகக் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் இசக்கிமுத்து புகார் அளித்தார்.
விசாரணையில் நகையை ஏலம் விடாமல் மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டுறவுச் சங்கத் தலைவர் பூதப்பாண்டியை 6 மாதத்துக்கும், செயலாளர் சுந்தரியை 3 மாதத்துக்கும் இடை நீக்கம் செய்துக் கூட்டுறவு இணைப் பதிவாளர் உத்தரவிட்டார்.