கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கில் இடை மனுதாரராக உள்ள அவர் தனது பதில் மனுவில், வன்னியர்களுக்கு மட்டும் பத்தரை விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றத் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.