தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கையில் நடைபெற்று வந்த 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கின. சுமார் 7 மாதமாக நடந்து வந்த அகழாய்வு பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.
ஆதிச்சநல்லூர், கொற்கையில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே போல் சிவகளையில் 700க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.