கொடைக்கானலில் உணவு விடுதிகளில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 70 கிலோவுக்கும் மேற்பட்ட காலாவதியான இறைச்சி உணவுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
உணவு விடுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, ஏழு ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் 6 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. முறையற்ற வகையில் பதப்படுத்தியும், அதிக கலர் ஏற்றப்பட்டும் வைக்கப்பட்டிருந்த ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சிகளையு, அவற்றால் செய்யப்பட்ட உணவுகளையும் கண்டுபிடித்த அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் முதல் நாள் தயார் செய்து மறுநாள் விற்பனைக்கு வைத்திருந்த பிரியாணி, புரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.