சி.பி.எஸ்.இ, பிளஸ் 1 வகுப்பின் உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில் கோவையை சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில், இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், 45 ஆண்டுகளில் 10 லட்சம் யோகா மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும், அவர்களில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகா பாட்டி நாணம்மாள் 2018ல் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.