ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழிக்கும் வகையில் சட்ட முன்வடிவு விரைந்து இயற்றப்பட்டால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொலை வழக்கில் கைதான நபர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, ரவுடிகளை ஒழிக்க சட்டம் இயற்றப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்' என்ற வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இயற்றப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.