காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக, இப்போது மத்திய நீர் வள ஆணையத்தின் தலைவராக இருக்கும் சுமித்ர குமார் ஹல்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த உத்தரவை மத்திய அமைச்சரவையின் பணி நியமனங்களுக்கான குழு வெளியிட்டுள்ளது. சுமித்ர குமார் ஹல்தரின் பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடைகிறது.
எனினும் அவர் மாற்றுப் பணி அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.