திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளகிணறு பகுதியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை வேடிக்கை பார்க்க நின்ற கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பள்ளத்தில் கிடந்த ஸ்கோடா ஆக்டாவியா காரை கோபி, காளிமுத்து, டாடா நெக்ஸான் மின்சார காரில் வந்தவர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அதே சாலையில் வேகமாக வந்த குவாலிஸ் கார், மின்சார கார் மற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோபி மற்றும் காளிமுத்து மீது மோதியதாக கூறப்படுகிறது.
கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காளிமுத்துவை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தலைமறைவான குவாலிஸ் கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.