திமுக ஆட்சியில் நியாயமான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் பவளவிழாவில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாக கூறினார்.