தென் மேற்குப் பருவக் காற்று காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இதேபோல, நாளை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 1ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.