தமிழகம் முழுவதுள்ள கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட, அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
5 சவரனுக்கு உட்பட்பட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் மட்டுமில்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் கூட்டுறவு சார் பதிவாளர், வங்கி சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து நவம்பர் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.