ஸ்டார்மிங் ஆப்பரேஷன் மூலம், தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 21,592 ரௌடிகளின் வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 நாட்டுத் துப்பாக்கிகள், கத்திகள் உள்பட மொத்தம் 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.