போட்டித்தேர்வுகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.
அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவர்கள் நுழைவதை தடுக்கும் விதமாக, தமிழ் மொழியில் தகுதித்தேர்வு முதலில் நடத்தவும், அந்த தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, விடைத்தாள்களை தொடர்ந்து திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடைமுறைக்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், ஒப்புதல் கிடைத்தவுடன் அமல்படுத்தப்படுமெனவும், அறிவிப்பாணை வெளியான 75 நாட்களுக்குப்பின் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.