சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 750வது இடத்தை பிடித்த கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித்குமாருக்கு டுவிட்டர் மூலம் தமிழக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பீளமேடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் - அமிர்தவள்ளி தம்பதியின் 2வது மகன் ரஞ்சித்குமார், பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உடையவர்.
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ள அவர், கடந்த 2 வருடங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன் ரஞ்சித்குமார் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் தெரிவித்தார்.