கோவில்களில் பயன்படாமல் உள்ள நகைகள் கோயில் வளர்ச்சிக்கு பயன்படும் எனில், அதற்காக எந்த விமர்சனத்தையும் திமுக அரசு எதிர்கொள்ளும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அவர், வீர வசந்தாராயர் மண்டப புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் என்றார்.