முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளன், கடந்த மே மாதம் பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். தொற்று பாதிப்பு மற்றும் வயதான பெற்றோரை கவனிக்க வேண்டி இருப்பதால், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.