திருச்சி மாவட்டம் லால்குடியில் சமூக ஆர்வலரை தாக்கியதாக கூறப்படும் புகாரில் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணாபுரம் அணைக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பாரதிமோகன் போராடியதாகவும், அதில் காவல் ஆய்வாளர் முத்துகுமார், காவலர்கள் சுரேஷ் பாண்டியன், குழந்தைவேலு ஆகியோர் பாரதிமோகனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாரத்திமோகன் அளித்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய அதிகாரிகள், காவல் ஆய்வாளருக்கு 2 லட்ச ரூபாயும், காவலர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தனர்.