டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். தமிழக ஆளுநராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை சந்தித்தார்.
மேலும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழக ஆளுநர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.