அதிமுகவைச் சேர்ந்தவரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி சம்பந்தப்பட்ட மனுதரார் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு உரிய நோட்டீஸ் வழங்கி சர்வே முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த சர்வே நிகழ்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.