மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் குறித்து சோதனை நடத்திய போலீசார், 12 குழந்தைகளை மீட்டுள்ளனர்.
ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் மாநகர காவல்துறையின் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவினர் மாநகர் முழுவதும் 20 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதுவரை 12 குழந்தைகளை மீட்டுள்ள போலீசார், பழங்காநத்தம் சமுதாய கூடத்தில் அவர்களை தங்க வைத்துள்ளார். சொந்த குழந்தையா அல்லது கடத்தட்ட குழந்தைகளா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.