நகைக்கடன் வழங்கியதில் முறைகேடுகள், விதிமீறல்களில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியுள்ள அனைவருக்கும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், விவசாயி அல்லாதவர்களுக்கு 3லட்சம் வரை கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தரிசு நிலங்கள், குவாரி நிலங்களுக்கு கூட கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.