டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்த சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மது விற்பனைக்கு உரிய ரசீது வழங்கவும், அவை முறையாக கண்காணிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது எனவும், மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.