ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தை 50 மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் பாக் ஜலசந்தி பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் படகுகளை பாதுகாப்பதிலும், மீன் பிடி தொழிலுக்கும் சிரமம் உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கையாக நாகை மீனவர்கள் கேரளாவின் கொச்சி துறைமுகம் செல்வதற்காக பாம்பன் வட கடல் பகுதியில் விசைப்படகுகளை நிறுத்தி உரிய அனுமதி பெற்று தூக்கு பாலத்தை கடந்து சென்றனர்.