கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தோஷ் சாமி மற்றும் மனோஜ்சாமி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இருவரிடமும் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில், பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தும் நிலையில், 8ஆம் மற்றும் 9ஆம் குற்றவாளிகளான சந்தோஷ் சாமி மற்றும் மனோஜ்சாமியிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.