சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் மூண்ட முன்விரோதத்தால், பா.ஜ.க. பிரமுகரை வெட்டிக் கொலை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர். பெரியகாரையைச் சேர்ந்த பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் கதிரவன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும், காவனவயலைச் சேர்ந்த பெரியசாமி, வீரபாண்டி ஆகியோருக்கும் இடையே தொழிலில் ஏற்பட்ட போட்டியால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை திருச்சி - ராமேஸ்வரம் புறவழிச்சாலையில் உள்ள பாஸ்ட் புட் கடையில் நின்றிருந்த கதிரவனை, பைக்கில் வந்த பெரியசாமியும், கதிரவனும் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.