முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய நகைகள் மற்றும் பணம், வேலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியோடு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 16ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி , 34 லட்சம் ரூபாய் பணம், 1 லட்சத்து 80 ஆயிரம் அன்னிய செலாவணி, 2 ஹார்டுடிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது. இவை அனைத்தையும் வேலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒப்படைத்தனர்.