ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்த பின், விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
சில இடங்களில் கைரேகை பதிவில் முதியவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், நியாய விலைக்கடைக்கு வர இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அத்தாட்சி செய்யப்பட்ட நபரின் விவரத்தைப் பதிந்து பொருட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படிவங்களை இருப்பு வைத்து தேவைப்படும் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையிலேயே பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், இதை மீறி பொதுமக்களை அலைக்கழித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.