மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல்நீரை மேகங்கள் உறிஞ்சி எடுக்கும் அரியக் காட்சிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் நேரில் பார்த்து ரசித்து வீடியோ எடுத்துள்ளனர். தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் இன்று காலை சிறிது நேரம் இந்த அரிய நிகழ்வு தோன்றி மறைந்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
ஒரே நேரத்தில் கடலில் குளிர்ந்த காற்றும், வெப்பமான காற்றும் வீசுவதால் இது போன்ற சுழல் தோன்றும் எனவும், பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இந்த சுழல் தோன்ற வாய்ப்புள்ளதாகவும் மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், இரண்டு வெப்பநிலையும் சம நிலைக்கு வந்துவிட்டால், சுழல் மறைந்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளனர்.