ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வீசிய சூறாவளி காற்றால் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒலகடம், எட்டிகுட்டை, கூனாக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கதலி ,செவ்வாழை, நேந்திரன்,மொந்தன் உள்ளிட்ட வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன.
ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 50 ஏக்கருக்கு மேல் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.