செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையில் தேங்கிய கால்வாய் நீரில் குளியல் போட்ட EX கவுன்சிலர்..! எல்லாம் ஒரு விளம்பரம்

Sep 21, 2021 10:17:34 AM

கன்னியாகுமரி அருகே, சாலையில் தேங்கியுள்ள கால்வாய் நீரை அகற்றக்கோரி, முன்னாள் கவுன்சிலர் ஒருவர் அதில் குளித்து நீச்சலடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பல கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது . இதேபோல் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு கூட்டமாவு கிராமம் வழியாக அமைக்கப்பட்டுள்ள திருவிதாங்கோடு கிளைக் கால்வாய் வழியாகவும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கால்வாயின் கடைமடைப் பகுதிகள் மற்றும் கிளை கால்வாய் பகுதிகளில் முறையாக தூர்வாரி குடிமராமத்துப் பணிகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது இதனால் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்ட நிலையில் கால்வாய் தண்ணீர் முறையாக செல்லாமல் முளகுமூடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கூட்டமாவு கிராமச் சாலையில் பாய்ந்து மற்றொரு கால்வாய் போல் கடந்த ஒருவாரமாக வடிந்தோடி வருகிறது.

இதனால் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அந்த கால்வாய் அடைப்புகளை சரி செய்து சாலையில் வடியும் தண்ணீரை கட்டுபடுத்தக் கோரி பொதுப்பணித்துறை மற்றும் முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் அந்த பகுதிக்கு வந்த முளகுமூடு பேரூராட்சி 15வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் என்பவர் சாலையில் ஓடும் புழுதி கலந்த தண்ணீரில் குளிக்க தொடங்கினார்.

அந்த சாலை தண்ணீரில் உருண்டு புரண்டு நீச்சலடித்ததோடு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? யார் நடவடிக்கை எடுப்பார்கள் ? என்று கேள்வியை முன் வைத்து மீண்டும் குளியலை தொடர்ந்ததோடு சில இளைஞர்கள் உதவியுடன் தனது சாலை குளியலை வீடியோவாகவும் எடுத்தார்.

அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். சாலையில் வடியும் கால்வாய் நீரை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து சாலையில் குளிக்கும் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். அதே நேரத்தில் மீண்டும் கவுன்சிலர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுய விளம்பரத்திற்காக தங்கப்பன் இந்த குளியல் போராட்டத்தை நடத்தியதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Advertisement
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement