நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டபட்டுள்ளது.
கடந்த மாதம் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்ட 165 பக்கங்களை கொண்ட இந்த ஆய்வறிக்கையில், நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள், தாக்கம், பாதிப்புகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு விலக்கு பெற மாநில அரசே தனி சட்டம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வினை நடத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.