நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட ரயில்வே பாலத்தில் மழை நீர் தேங்கியதால், அவ்வழியாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து சிக்கிக்கொண்டது.
பேருந்துக்குள் இருந்த 30 மாணவிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள ரயில்வே பாலத்தில் மழை நீர் தேங்கியது.
இந்நிலையில், பாலத்தை கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து, தண்ணீரில் சிக்கிக்கொண்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் டிராக்டர் உதவியுடன்கல்லூரி பேருந்து மீட்கப்பட்டது.