மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துகின்றன.
எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த மாதம் சோனியா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர்.