9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்த பா.ம.க., மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணியை இறுதி செய்வது குறித்து அதிமுக பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நந்தம் விஸ்வநாதன் ஆகியோரும், பா.ஜ.க. தரப்பில் கருநாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனிடையே, முதலில் தனித்து போட்டி என அறிவித்த பாமக, அதிமுக கூட்டணியில் போட்டியிட விரும்பம் தெரிவித்து, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என விருப்ப பட்டியலை அதிமுகவிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.