இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்த போர்டு நிறுவனம், சென்னை மறைமலைநகரில் உள்ள தனது ஆலையில், ஏற்றுமதிக்கான எக்கோஸ்போர்ட் கார் உற்பத்தியை மீண்டும் துவக்கியுள்ளது.
ஆலைகளை மூடும் முடிவை எடுத்தாலும் சுமார் 30 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்யும் ஆர்டர் கையில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை தயாரித்து முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போர்டு தனது சென்னை மறைமலைநகர் ஆலையை மூடுவதால் சுமார் 5 ஆயிரத்து 300 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. குஜராத்தில் உள்ள சனாந்த் ஆலையில் சுமார் 2000 பேரும், எஞ்சின் உற்பத்தி பிரிவில் 500 பேரும் பணியாற்று கின்றனர்.
சனாந்த் ஆலை இந்த ஆண்டு இறுதியிலும், சென்னை மறைமலைநகர் ஆலை அடுத்த ஆண்டு மத்தியிலும் மூடப்படும் என போர்டு அறிவித்துள்ளது. சனாந்தில் எஞ்சின் உற்பத்தி பிரிவு தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.