மதுரையில் அதிமுக தொழிற்சங்க தேர்தலில் நிர்வாகி ஒருவரை போட்டியின்றி தேர்வானது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
பழங்காநத்தம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில், செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கு கிளை செயலாளராக ஏற்கனவே பதவி வகித்த முருகன் மீண்டும் தேர்வானார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மற்றொரு தரப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் கோஷம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இது கைகலப்பாக மாறியது.போலீசார், இருதரப்பையும் அமைதிப்படுத்தி, அனுப்பி வைத்தனர்.