கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்த 3 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
கோனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது 3 வயது மகன் தர்ஷன் கடந்த 13-ம் தேதி மாலை தனது அக்காளுடன் வீட்டிற்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது புல்வெளியில் இருந்து வந்த கட்டு விரியன் பாம்பு தர்ஷனை கடித்துள்ளது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகேஸ்வரன் உடனடியாக தர்ஷனை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல்கிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.