நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி வீட்டில் இருந்து மாயமானதாக கூறப்பட்ட நிலையில், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
சின்ன அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் பாண்டியன் என்பவரது 19-வயது மகள் ஸ்வேதா, கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொண்டு இரண்டாவது முறையாக தேர்வு எழுதியுளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஸ்வேதா வீட்டில் இருந்து மாயமானார். நாமகிரிப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்த நிலையில், ஸ்வேதா காதலனுடன் திருமணம் செய்துகொண்டு உத்தமபாளையம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்துள்ளது.