பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ்-ன் Earthshot விருதுக்குக் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு காண்பவர்களுக்கு விருது வழங்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதிலிருந்தும் கலந்துக்கொண்டவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி வினிஷா முதல் 15 இடங்களில் இடம்பிடித்துள்ளார்.
சூரிய ஒளி மின் ஆற்றல் மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்ததற்காக வினிஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.