சாதிய தடைகளை உடைக்க தான் சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது என சென்னையில் நடைபெற்ற சமூக நீதி நாள் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
அங்கு பெரியாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர் தான் பல மாநிலங்களுக்கு சென்று வந்ததாகவும், அங்கு கல்வி, மருத்துவம், பெண் உரிமையை எட்ட நாளும் போராடும் சூழல் உள்ளதாகவும் கூறினார்.
அரசு சாதி குறித்து கேட்பது மறுக்கப்பட்ட சாதிக்கான உரிமைகளை கொடுக்கவே, சாதியை வளர்க்க அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.