தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளான இன்று தமிழக அரசின் சார்பில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, பெரியாரின் உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.