தமிழகத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 206 பேரும், சென்னையில் 202 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 135 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 134 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 110 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 108 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,548 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 25 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 16,756 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.